உள்ளூர் செய்திகள்

செயல்படாத காமிராக்கள்.

நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலையில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

Published On 2023-07-09 10:17 IST   |   Update On 2023-07-09 10:17:00 IST
  • நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்குவழிசாலையில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் 4 வழிச்சாலை பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

நத்தம்:

மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கபட்டுள்ளது. இதில் நத்தத்தில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் நான்குவழிசாலையில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. இதனால் 4 வழிச்சாலை பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் செயல்படாத கேமராக்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News