உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் வீட்டில் திருட்டு: போலீசார் விசாரணை
- ராஜ்மோகன் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
- வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார்.
கடலூர்:
நெய்வேலி வட்டம் -2 என்.கே.ஆர். பிள்ளை சாலையில் வசித்து வருபவர் ராஜ்மோகன் (வயது 56). இவர் என்.எல்.சி. சுரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி ராஜ்குமார் தனது உறவினர் திருமணத் திற்காக தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்றார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்மோகன் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.