உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம்
- 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கசாயம் வழங்கப்பட்டது
- பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
வடகிழக்கு பருவமழையால் ஏ.டி.எஸ். கொசுக்கள் உருவாகி டெங்கு காச்சல் பரவுவதை தடுக்கவும், அதிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 6முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது.
பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மருத்துவர் வானதி நாச்சியார், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.