வேப்பனப்பள்ளி அருகே இரவில் நடந்த விபத்து: சாலையில் குறுக்கே புகுந்த பாம்பால் 5 மோட்டார் சைக்கிள்கள் மோதி 2 பேர் பலி
- வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்ததுள்ளது.
- 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த மாதேஷ்(வயது 22), ஒட்டூர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நவீன் (25), கொரலட்டி கிராமத்தை சேர்ந்த முரளி(22) மற்றும் கட்டாயம்பேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 நண்பர்களுடன் இரவு வேப்பனபள்ளி அருகே உள்ள அவரது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மூன்று இரு சக்கர வாகனங்களில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது சுமார் 9 மணி அளவில் வேப்பனப்பள்ளி நகரத்தின் அருகே வந்த போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே புகுந்ததுள்ளது. அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தை கிருஷ்ணமூர்த்தி நிறுத்திய போது பின்னே வந்த முரளி மற்றும் மாதேஷ் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மாதேஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து காயமடைந்த முரளி மற்றும் நவீன் ஆகிய இருவரையும் பொதுமக்கள் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும தித்தனர்.
பின் னர் அதே பகுதி யில் வேப்ப னப் பள் ளி யில் இருந்து தாசி ரிப் பள்ளி கிரா மத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் புதூர் கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த தியாகராஜன் (32) என்பவரும் அதே பகுதியில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே தியாகராஜன் துடிதுடித்து பரிதாபமாக உயிழிழந்தார்.
தொடர்ந்து ஒரே இடத்தில் 5 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.