உள்ளூர் செய்திகள்
கோவைப்புதூர் பத்திரகாளியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
- ஸ்ரீசித்தர் சக்திநகர் அறக்கட்டளை நிறுவனர் சிவஜோதி சித்தரையா தலைமையில் வழிபாடு
- அக்னியில் அம்மன் உருவம் தெரிந்த காரணத்தால் பக்தர்கள் பரவசம்
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த கோவைப்புதூரில் பத்திரகாளி அம்மன், கருப்பராயர், குரு சக்தி நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இரவு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அத்தகைய நாளில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.அதே போன்று இந்த மாதமும் அமாவாசை நாளாகிய நேற்று இரவு ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.ஸ்ரீ சித்தர் சக்தி நகர் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா தலைமையில் நடைபெற்ற இந்த அமாவாசை பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அக்னியில் அம்மன் உருவம் தெரிந்த காரணத்தால் பக்தர்கள் உடனே பரவசம் அடைந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.