உள்ளூர் செய்திகள்

பாலம் கட்டும் பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தொடக்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

அங்கமங்கலம் பஞ்சாயத்தில் புதிய பாலம் கட்டும் பணி தொடக்கம்

Published On 2023-04-14 09:19 GMT   |   Update On 2023-04-14 09:19 GMT
  • மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் பஞ்சாயத்து மயிலோடை பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளநீர் இந்த பாலத்தை மூழ்கடித்து செல்வதால் இதில் உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து மயிலோடையில் புதிய பாலம் கட்ட ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த பாலம் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் தொடக்கி வைத்தார்.

இதில் யூனியன் சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஆழ்வை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், என்ஜினீயர் வெள்ளப்பாண்டியன், பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள், கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News