உள்ளூர் செய்திகள்
சுந்தரபாண்டியபுரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
- சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- தொடர்ந்து இந்த புதிய திட்டம் குறித்து விளக்கி பயன்பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித்தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார்.
தென்காசி:
சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் எஸ்.எஸ்.எம். செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெண்கள் அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த புதிய திட்டம்குறித்து விளக்கி பயன் பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித் தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மரிய செல்வம் சிறப்பு விருந்தினர் செல்வகுமாருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஆசிரியர் சுகந்தி வரவேற்று பேசினார். கீதா தன்னார்வலராக பங்கேற்றார்.