உள்ளூர் செய்திகள்

பேட்டரி வாகனங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

விளாத்திகுளம் அருகே 17 கிராம ஊராட்சிகளுக்கு புதிய பேட்டரி வாகனங்கள்

Published On 2023-09-23 08:40 GMT   |   Update On 2023-09-23 08:40 GMT
  • புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்து.
  • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 17 கிராம ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் இயக்கத்தின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி வாக னங்கள் வழங்கப்பட்து. அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் புதூர் தி.மு.க. ஒன்றிய செயலர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News