'நெட்' தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது
- இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறு வதற்கும் ‘நெட்’ தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
- இந்த தேர்வில் முதல்கட்ட மாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
சேலம்:
சென்னை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கும் 'நெட்' தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களே உதவி பேராசிரியர்களாக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் முடியும்.
அந்த வகையில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி வாயிலான தேர்வாக நடத்துகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.
இந்த தேர்வில் முதல்கட்ட மாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மீதம் உள்ள பாடங்க ளுக்கான தேர்வுக்கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படப்படும் என்றும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் நெட் தேர்வு மையம் காகாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்வு
மையத்தில் செய்யப்பட்டு ள்ளன. தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனு மதிக்கப்ப டமாட்டார்கள். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை முதுநிலை
பட்டதாரிகள் ஏராள மானோர் எழுதுகின்றனர்.