உள்ளூர் செய்திகள்
பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி
- வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது.
- போட்டியை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளருமான திருமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெபராஜ், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லெட்சு மணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன், நடுவர்கள் சுந்தர் ராஜ், உமாநாத், எடிசன் , பசுங்கிளி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டி க்கான ஏற்பாடுகளை கங்கை கொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர் கார்த்திக்குமார் செய்திருந்தார்.