நெல்லை- மேட்டுப்பாளையம் ரெயில் கடையநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.ஜ.க. கோரிக்கை
- ரெயில் எண் 06004 கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.
தென்காசி:
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளருக்கு, பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் ஒரு கோரிக்கை மனு எழுதியுள்ளார்.
கடையநல்லூர்
அதில், நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக செல்லும் தாம்பரம் ரெயிலானது கடையநல்லூர் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி என்பதால் இங்கு பொதுமக்கள் மாணவ, மாணவிகள் வியாபாரிகள் அதிகளவில் வெளியூர்களுக்கும், பெருநகரங்களுக்கும் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே ரெயில் எண் 06004 கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவை ஜூன் மாத இறுதியுடன் முடிவடைய இருப்பதால் இந்த ரெயில் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.
தென் மாவட்டம்
தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் பணிபுரிந்து வருவதாலும் நெல்லை, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, பழனி, ஆகிய நகரங்களில் பிரசித்தி பெற்ற கோவில்கள் இருப்பதாலும் மக்கள் அங்கு எளிதாக பயணிப்பதற்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரெயில் சேவை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.
கோயமுத்தூர்- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் -கோயம்புத்தூர் ரெயில் சேவையை விருதுநகர், செங்கோட்டை மற்றும் செங்கோட்டை விருதுநகர் இணைப்பு முறை ரெயிலாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.