உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்த காட்சி.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நெல்லையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-05 10:12 GMT   |   Update On 2022-06-05 10:12 GMT
  • பேரணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
  • 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நெல்லை:

உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சந்திப்பு ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோடகநல்லூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணியில் கலெக்டர் கலந்து கொண்டார்.

பின்னர் வீரவநல்லூருக்கு உட்பட்ட தட்டைபாறை குளத்தில் கரையில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அம்பையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். வீ.கே.புரத்தில் குருவிகளை பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கு கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், தாசில்தார்கள் சண்முக சுப்பிரமணியன், ஆனந்த குமார், பாலசுப்பிரமணியம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சூழலியல் பூங்காவினை கலெக்டர் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழாவில் தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழலுக்கான விருதுக்கு தேர்வாகி உள்ள நெல்லையை சேர்ந்த 3 பேருக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்குகிறார்.

Tags:    

Similar News