ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல் பேசிய போது எடுத்த படம்.
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை
- விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- நெல்லை பகுதி கழகம் சார்பில் டவுன் ஈசான விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நெல்லை:
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.
நலத்திட்ட உதவிகள்
மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட பொரு ளாளர் மாடசாமி, துணை செயலாளர்கள் பழனி குமார், செல்வகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்றைய தினம் பாளை பகுதி சார்பில் பாளையில் உள்ள பார்வை யற்றோர் இல்லத்தில் காலை உணவு, சமாதான புரத்தில் கட்சிக் கொடி ஏற்றுதல், செபஸ்தியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நெல்லை பகுதி கழகம் சார்பில் டவுன் ஈசான விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்குதல், இளங்கோநகர் விநாயகர் கோவில் சிறப்பு பூஜை மற்றும் அப்பகுதியில் கட்சிக் கொடி ஏற்றுதல் மற்றும் ஒன்றிய பகுதிகளிலும் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், பாலகிருஷ்ணன், பகுதி பொறுப்பாளர்கள் நெல்லை மணிகண்டன், தச்சை ராஜ், பாளை அந்தோணி, ஒன்றிய செய லாளர்கள் வேல்பாண்டி, சின்னப்பாண்டி, நிர்வா கிகள் கணேசன், பாபுராஜ், தினகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மலுங்கு வேலாயுத முருகன், கோபி ராஜன், லயன் முருகன், பாஸ்கர் நவீன், ஜெய்சிங், முருகன், சபரி, முரளிதரன், சிவகுமார், தங்கப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.