உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் பசுமை வீடு கட்டி தரும் பணியில் அலட்சியம்

Published On 2022-06-11 15:46 IST   |   Update On 2022-06-11 15:46:00 IST
  • மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
  • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி,

ஊட்டி உல்லத்தி ஊராட்சி, அம்மநாடு பழங்குடியினர் கிராமத்தில் 2020-2021ம் ஆண்டின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியின பெண் சாலனி என்பவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த பணிகளை கலெக்டர் அம்ரித் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் ஜன்னல் மட்டத்திற்குகட்டப்பட்டு இருந்தது. இதனை விரைவில் கட்டி முடிக்குமாறு பணி மேற்பார்வையாளர் பொன் மொழி என்பவருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் கலெக்டர் அம்ரித் நேற்று முன் தினம் மீண்டும் நேரில் ஆய்வு செய்தார். அப்போது 6 மாதம் கடந்தும் கூரை மட்ட அளவிற்கு மட்டுமே பணி நடந்திருந்தது.

இதேபோல் பல்வேறு திட்டப்பணிகளில் முன்னேற்றம் இல்லாமலும். பணிகள் முடிக்கப்படாமலும் மேற்பார்வையாளர் பொன்மொழி அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News