உள்ளூர் செய்திகள்

வேப்பனபள்ளி அருகே அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கிய வாலிபர்கள் -மாற்று வழியில் பேருந்துகள் இயக்கம்

Published On 2022-10-16 13:31 IST   |   Update On 2022-10-16 13:31:00 IST
  • பேருந்திலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
  • அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேப்பனபள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் பஸ்ஸின் மீது பூமாலையை எடுத்து வீசி உள்ளனர். அதை கேட்ட நடத்துனர் ராமலிங்கம் மற்றும் டிரைவர் கிருஷ்ணன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி இளைஞர்கள் பேருந்திலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் வேப்பனபள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டிரைவர் மற்றும் நடத்துனர் இருவரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வாலிபர்கள் டிரைவர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு செல்ல கூடிய பேருந்துகளை நிறுத்தி மாற்று வழியில் பேருந்துகளை இயக்க மாவட்ட போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News