உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

திருவெண்ணைநல்லூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பங்கேற்பு

Published On 2022-07-19 08:37 GMT   |   Update On 2022-07-19 08:37 GMT
  • திருவெண்ணைநல்லூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பங்கேற்றார்.
  • பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழுப்புரம்:

திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள கண்ணாரம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பொதுமக்க ளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப்பை பயன்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அன்புக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பள்ளி மாணவ- மாணவிகள் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார், ஊராட்சி எழுத்தர் தண்டபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோவிந்தன், அமிர்தவள்ளி கார்த்திகேயன், வீரம்மாள், ராஜவேல், கிராம உதவியாளர் லட்சுமி, துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News