திண்டிவனம் அருகே குடிபோதை ஆசாமி தூக்கு போட்டு தற்கொலை
- திண்டிவனம் அருகே குடிபோதையில் ஆசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- வீட்டின் அருகில் உள்ளவர்கள் செந்திலை சென்று பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 45) கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த இவர்கள் மனைவி கடந்த ஒரு மாதம் முன்பு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று இரவு செந்தில் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது செல்போன் மூலம் மனைவியிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். இதை கேட்ட அதிர்ச்சடைந்த செந்தில் மனைவி அவர் கணவர் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே வீட்டின் அருகில் உள்ளவர்கள் செந்திலை சென்று பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். உடனே அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற பல்வேறு இடங்களில் மது போதைகளினால் பல்வேறு தற்கொலை முயற்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.