உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு ெதரிவித்து திரண்டவர்களை படத்தில் காணலாம்.

சூளகிரி அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்சி அலுவலகம் - அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Published On 2022-09-20 15:17 IST   |   Update On 2022-09-20 15:17:00 IST
  • கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது.
  • ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாணித்தெரு நுழைவுவாயில் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலம் உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை பொதுமக்களுக்கு பட்டா பிரித்து அரசு சார்பில் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் அரசு உபயோகத்துக்கு தேவைப்பட்டதால் பொதுமக்களுக்கு இழப்பீடு கொடுத்து இந்த நிலம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த நிலத்தின் ஒரு பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த கடையை காலி செய்ய உத்தரவிட்டனர்.

இதனால் ஆக்கிரமித்து கடை வைத்திருந்த அந்த நபர் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரில் அங்கு ஒரு அலுவலகத்தை தொடங்கி விட்டார்.

இன்றுகாலை ஆக்கிரமிப்பு அகற்ற ேஜ.சி.பி. எந்திரம், தீயணைப்பு துறை வாகனத்துடன் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, சூளகிரி தாசில்தார் அனிதா, இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.

அப்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு ஆதரவாக அவர் சார்ந்த கட்சியின் நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். அவர்கள் அதிகாரிகள் -போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News