ஏரியை ஆக்கிரமித்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளதை பார்வையிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்கும் காட்சி.
ராயக்கோட்டை அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரி மீட்பு
- 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
- அதிகாரிகள் நடவடிக்கையால் ஏரிநிலம் மீட்கப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்ப கரை ஊராட்சி செங்கோட சின்னஹள்ளி ஏரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியில் சுமார் 6 ஏக்கருக்கு அதிகமான நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாய பயர்கள் மற்றும் கால்நடை தீவன பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இதை அறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதன்பேரில் கெலமங்க லம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி, உள்வட்ட நிலஅளவர் வீரபத்திரன், கிராம நிர்வாக அதிகாரி சசிகுமார், மற்றும் வருவாய்துறையினர், பொது மக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் தலைமையியலான போலீ சார் பாதுகாப்புடன்
ஜே.சி.பி. வாகனம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.