உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையம் அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-07-07 10:22 GMT   |   Update On 2022-07-07 10:22 GMT
  • பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்த பணி நடைபெறுவதையொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அடுத்துள்ள ரெட்டிபட்டி அம்பேத்கார் நகர் அருகே உள்ள சேலம்- சென்னை மார்க்க ரெயில் பாதையில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக 18 ராட்சத கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டது, கடந்த 4-ந் தேதி 6 கான்கிரீட் பாக்ஸ் பொருத்தப்பட்டு பணி நடைபெற்றது. மீதமுள்ள 12 பாக்ஸ் பொருத்துவதற்கான பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பனியின் போது சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ், கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்து கவனித்து வருகின்றனர், இந்த பணி நடைபெறுவதை–யொட்டி சேலம்-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் 4 ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News