உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து பல்வேறு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்றனர்.

போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுப்புலியூர் அரசு பள்ளியில் கலை பண்பாட்டு திருவிழா

Published On 2022-11-26 14:50 IST   |   Update On 2022-11-26 14:50:00 IST
  • கலையரசன்- கலையரசி என்ற சான்றிதழ் வழங்கி துபாய் பள்ளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
  • பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

மத்தூர்,

தமிழகத்தில் பள்ளி மாண வர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்து பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலை முறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டிசை, நடனம், காட்சிக்கலை உள்ளிட்ட 10 தலைப்புகளில் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு அதில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்களை கலையரசன்- கலையரசி என்ற சான்றிதழ் வழங்கி துபாய் பள்ளி சுற்றுலா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் அருகேயுள்ள மேட்டுப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது .இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வரதராஜன் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் அம்பேத்கர், வெங்கடேசன், ஆசிரியர்கள் முருகன், பார்த்திபன், ராஜ்குமார், நதியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேஸ்வரி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News