உள்ளூர் செய்திகள்
போச்சம்பள்ளி அருகே குடிபோதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி மூழ்கி சாவு
- பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்
- நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரோஜ் சர்மா (வயது 45).மரவேலைகள் செய்பவர். இவர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பனங்காட்டூரில் சின்னசாமி என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வேலையைமுடித்துவிட்டு மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் பாரூர் பெரிய ஏரி பகுதிக்கு சென்ற நிரோஜ் சர்மா தடுமாறி ஏரிக்குள் தவறி விழுந்துள்ளார்.இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று நிரோஜ் சர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.