உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி அருகே விபத்தை ஏற்படுத்தி வாலிபரின் உயிரை பலி வாங்கிய கார்.

நல்லம்பள்ளி அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2022-10-31 09:34 GMT   |   Update On 2022-10-31 09:34 GMT
  • இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
  • சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குடிப்பட்டி மேம்பாலம் அருகே நேற்று மாலை நாமக்கல்லில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு கார் சென்றது.

அப்போது அந்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24), மோகன் (26) ஆகிய இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தரு மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News