உள்ளூர் செய்திகள்
தீர்த்தகிரி
மத்தூர் அருகே ஆற்று சுழலில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
- குளிக்க சென்ற தீர்த்தகிரி சுழலில் சிக்கி நீரில் அடித்து செல்லப்பட்டார்.
- பாவக்கல் என்ற இடத்தருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் என்று பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தீர்த்தகிரி (வயது 22). தருமபுரி சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று பாம்பாறு அணை ஆற்று படுகையில் குளிக்க சென்ற தீர்த்தகிரி சுழலில் சிக்கி நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீர்த்தகிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாவக்கல் என்ற இடத்தருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.