உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2022-09-09 15:03 IST   |   Update On 2022-09-09 15:03:00 IST
  • கல்குவாரி பகுதியில் கூட்டமாக பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பது தெரிய வந்தது.
  • சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 10 ஆயிரத்து 400, 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் மறைவான இடத்தில் நாள்தோறும் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா அட்வின் உத்தரவின் படி தனிப்படை போலீஸார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கல்குவாரி பகுதியில் கூட்டமாக பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அங்கு பெரிய ஆலரஹள்ளி பகுதியை சேர்ந்த பாஷா (எ)பாதூஷா (வயது 52), மத்தூர் அருகே உள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (34), கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (42), தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்டரப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (31), மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்த ரகு ( 29) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ 10 ஆயிரத்து 400, 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

அங்கிருந்து தப்பியோடிய சின்னஆலரஹள்ளி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீது மத்தூர் உதவி காவல் ஆய்வாளர் மோகன் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றார்.

Tags:    

Similar News