உள்ளூர் செய்திகள்

 மரக்காணம் அருகே நடு குப்பம் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த வீடு.

மரக்காணம் அருகே சிலிண்டர் வெடித்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது

Published On 2023-11-02 07:09 GMT   |   Update On 2023-11-02 07:09 GMT
  • .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
  • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரசு (45)நேற்று இரவு இவரது வீட்டில் வழக்கம்போல் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர் .நள்ளிரவு நேரத்தில் திடீரென சரசு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவரது கூரை வீடும் தீ பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடிக்கும் போது இரவு நேரம் என்பதால் பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் பயங்கர சத்தத்தை கேட்டு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரவர் வீட்டை விட்டு வெளியில் வெகு தூரம் ஓடி உள்ளனர். அப்போதுதான் சரசு வீட்டில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது .

உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி விட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்து தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரசு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது . இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News