உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே நகைக்கடையில் திருடிய பெண் கைது
- நகை வாங்குவது போல நடித்தபடி தங்க காசுகளை திருடி ஒளித்து வைத்துள்ளார்.
- கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்சூர் அஹமது (வயது 36). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நகை கடை நடத்தி வருகிறார்.
இந்த கடைக்கு ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி கவிதா (37) என்பவர் நகை வாங்குவது போல வந்துள்ளார்.
அப்போது நகை வாங்குவது போல நடித்தபடி தங்க காசுகளை திருடி ஒளித்து வைத்துள்ளார்.
இதை கடை உரிமையாளர் மன்சூர் அஹமது பார்த்து விட்டார். இதையடுத்து கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் கவிதாவை விசாரித்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து 4 கிராம் தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.