உள்ளூர் செய்திகள்

கல்லாவி அருகே விவசாய நிலத்தில் புகுந்து ரூ.38000 மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

Published On 2022-09-20 15:11 IST   |   Update On 2022-09-20 15:11:00 IST
  • தோட்டத்தில் விவசாய பணிகளுக்காக ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான குழாய்களை வாங்கி வைத்திருந்துள்ளார்.
  • போலீசார் பழனியை கைது செய்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகேயுள்ள புதூர் புங்கனை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). இவர் தனது தோட்டத்தில் விவசாய பணிகளுக்காக ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான குழாய்களை வாங்கி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பிரபாகரன் கல்லாவி போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் பிரபாகரனின் தோட்டத்தில் புகுந்து கைவரிசை காட்டியது சிங்கார பேட்டை அருகே யுள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த பழனி (43), புங்கனை பகுதியை சேர்ந்த கோகுல் (20),சுவேதன் (20), விஜயராகவன் (20) ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது.

அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பழனியை கைது செய்தனர்.மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News