உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே விபத்தில் சிக்கியவர் தற்கொலை
- இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
- சிகிச்சை பலன் தரவில்லை என்று வேதனையில் இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேகைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 44).இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.இதற்காக சிகிச்சை பெற்றும் வருகிறார்.
ஆனால் சிகிச்சை பலன் தரவில்லை என்று வேதனையில் இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி கல்பனா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.