உள்ளூர் செய்திகள்
சிறுவர்-சிறுமியர் வகுப்பறையில் ஜன்னல் அருகே உயரமான இடத்தில் நிற்கும் காட்சி.
ஓசூர் அருகே வகுப்பறையில் மழைநீர் சூழ்ந்ததால் ஜன்னலை பிடித்து தொங்கிய சிறுவர்-சிறுமியர்
- கனமழை பெய்து, பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.
- வகுப்பறையில் இருந்த ஜன்னலை பிடித்தவாறு உயரமான இடத்தில் தொங்கி நின்றனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே கொலதாசபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கொலதாசபுரத்தில் கனமழை பெய்து, பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது.
மாணவ, மாணவியரின் முழங்கால் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால் அவர்கள், வகுப்பறையில் இருந்த ஜன்னலை பிடித்தவாறு உயரமான இடத்தில் தொங்கி நின்றனர். இதனால், ஆசிரியை செய்வதறியாது திகைத்தார்.
பின்னர், குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பின், அவர்கள் பள்ளிக்கு வந்து குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.