உள்ளூர் செய்திகள்

 தீ பிடித்து சேதமடைந்துள்ள மீட்டர் பெட்டிகள்.

ஓசூர் அருகே, உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து விழுந்து உராய்வு ஏற்பட்டதில் 12 வீடுகளில் மீட்டர் பெட்டிகள் சேதம்

Published On 2022-11-17 15:28 IST   |   Update On 2022-11-17 15:28:00 IST
  • 12 வீடுகளில் திடீரென மின்பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) தீ பிடித்து சேதமடைந்தன.
  • தனியார் குடியிருப்பு பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்த குள்ளு பகுதியில் நந்தவனா என்ற தனியார் லேஅவுட் உள்ளது. இங்கு 30 வீடுகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த ஒயர் அறுந்து விழுந்து அருகிலுள்ள மின்கம்பத்தில் உள்ள ஒயருடன் உராய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 12 வீடுகளில் திடீரென மின்பெட்டிகள் (மீட்டர் பாக்ஸ்) தீ பிடித்து சேதமடைந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு மக்கள் உடனடியாக தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தாமதமின்றி மின்பெட்டிகள் வழங்கவும் மற்றும் இருட்டில் தவிக்கும் அந்த தனியார் குடியிருப்பு பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News