உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

Published On 2022-10-27 13:13 IST   |   Update On 2022-10-27 13:13:00 IST
  • சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.
  • அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது.
  • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.

குளச்சல், அக்.27-

குளச்சல் அருகே திக்கணங்கோடு கீழ புல்லுவிளையை சேர்ந்தவர் ரெத்தினகுமார்.

இவரது மகன் ரிஜேஸ் (வயது26).கூலி த்தொழிலாளி. கடந்த 24-ந் தேதி இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகில் செல்லும்போது பெத்தேல்புரத்தை சேர்ந்த சிம்சோனி (34) ரிஜேஸை வழிமறித்து பணம் கேட்டார். ரிஜேஸ் பணம் இல்லை என கூறினார்.

அப்போது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரிஜேஸிடமிருந்து ரூ.200 ஐ பறித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாய மடைந்த ரிஜேஸ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சோனியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சிம்சோனி பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது மேலும் 4 வழக்குகள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

Tags:    

Similar News