உள்ளூர் செய்திகள்

உத்தனப்பள்ளி சூளகிரி சாலையில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை படத்தில் காணலாம்.

சூளகிரி அருகே தரைபாலத்தின் மேல் வெள்ளநீர் செல்வதால் பொதுமக்கள் அவதி

Published On 2022-10-20 14:43 IST   |   Update On 2022-10-20 14:43:00 IST
  • இந்த சாலை வழியாக செல்லவதற்கு அச்சபட்டு சென்று வருகின்றனர்.
  • குற்றவியல் விசாரணையில் கணிணிமயமாக்கல்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் உத்தனப்பள்ளி சூளகிரி செல்லும் சாலை ஒரமாக உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் சாலையில் உள்ள தரை பாலத்தில் 2 1/2 அடி உயத்திற்கு தண்ணீர் செல்கிறது. இது முக்கியமான சாலை என்பதால் பல கிராம மக்கள் இந்த சாலை வழியாக செல்லவதற்கு அச்சபட்டு சென்று வருகின்றனர்.

அரசு சார்பில் எச்சரிக்கை பலகையும் வைக்கபட்டு ள்ளது. வேலைக்கும் செல்பவர்கள் மாணவர்கள் சிரம பட்டு வருகின்றனர். மழை காலங்களில் சிரமம் இல்லாமல் சென்று வர உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News