உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே நிலக்கடலை விதைக்கப்பட்டு நீரின்றி காய்ந்து கிடக்கும் வயல்கள்.

சூளகிரி அருகே நிலக்கடலை விதைக்கப்பட்டு நீரின்றி காய்ந்து கிடக்கும் விளைநிலங்கள்

Published On 2022-07-01 15:03 IST   |   Update On 2022-07-01 15:03:00 IST
  • 500 ஏக்கரில் நிலக்கடலை விதைப்பு.
  • மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

சூளகிரி,

சூளகிரி தாலுகா பி,எஸ்,திம்மசந்திரம், காட்டுநாயக்கனதொட்டி, பேரிகை, சின்னாரன் தொட்டி, நெரிகம், ஆலுர் ,கு ம்பளம், மாரண்டப்பள்ளி, செட்டிபள்ளி, காளிங்கா வரம், மருதாண்டப்பள்ளி, மேலுமலை, உத்தனபள்ளி, காமன்தொட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் 10 நாளைக்கு முன்பு தொடர் மழை பெய்தது.

இதனால்விவசாயிகள் தோட்டங்களை உழுது பண்படுத்தி 500 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் அரசு வேளாண்மை துறையின் மூலமும், தனியார் மூலமும் நிலக்கடலை விதைகள் வாங்கி மிக ஆவலாக விளை நிலங்களில் விதைத்தனர்.

தொடர் மழை நீடிக்கும் என விவசாயிகள் காத்து இருந்தனர். ஆனால் மழை பெய்யாததால் கவலையில் மூழ்கியுள்ளனர்.

Tags:    

Similar News