அ.தி.மு.க. சார்பில், ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமையில் மக்கள் மற்றும் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் அலுவலகத்திலும், மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் மனு ஒன்றை வழங்கினர்.
அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே செயல்படுத்தவுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் -அ.தி.மு.க. பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் தலைமையில் மனு
- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
ஓசூர்,
ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே, திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, 1 ஏக்கர் பரப்பளவில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கைவிட வலியுறுத்தி, மாநகர 36-வது வார்டு அ.தி.மு.க. சார்பில், ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர். வாசுதேவன் தலைமையில் பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணியன் அலுவலகத்திலும், மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜேந்தி ரனிடம் மனு ஒன்றை வழங்கினர்.
அதில்,இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாசுதேவன், குடியிருப்பு பகுதிகள், அரசு பள்ளிகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு அருகில் திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் அமைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை, பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடை பயிற்சி யாளர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.