உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நடந்தது.

அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

Published On 2023-09-29 15:33 IST   |   Update On 2023-09-29 15:33:00 IST
  • உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.
  • முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர் அருண்குமார் அனைவரை யும் வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெங்கசாமி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தம்பி அய்யன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வீர சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

முகாமை ஆலத்தூர் ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி திராவிட ச்செல்வன் தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர்கள் தமிழ் பிரியா, விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, "நூலகமும் மாணவர்களும்" என்ற தலைப்பில் பள்ளியின் கணித ஆசிரியர் ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். முடிவில் பள்ளி ஆசிரியர் கோபி கிருஷ்ணா நன்றி கூறினார்.

Tags:    

Similar News