உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே நர்சு மாயம்: தந்தை புகார்

Published On 2023-03-31 15:19 IST   |   Update On 2023-04-03 11:52:00 IST
  • இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்
  • கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை

கடலூர்:

 பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் சிநேகா (22). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.    கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசில் சிநேகாவின் தந்தை தனசேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிநேகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News