உள்ளூர் செய்திகள்

வெள்ளக்கல் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2023-05-26 07:57 GMT   |   Update On 2023-05-26 07:57 GMT
  • பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
  • 14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

கடந்த 21-ந் தேதி மறு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி மாலை அம்ம னுக்கு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ தட்டுகளுடன் ஊர்வல மாக கோவிலுக்கு சென்றனர்.

பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் 23-ந் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தலும், இரவு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபேற்றது. திருவிழா விற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில், திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News