உள்ளூர் செய்திகள்

லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கிக் கிடக்கும் காட்சி

கார் மீது லாரி மோதி விபத்து; சேலம் இரும்பாலை ஊழியர் பலி

Published On 2023-06-23 07:23 GMT   |   Update On 2023-06-23 07:23 GMT
  • சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.
  • இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ராசிபுரம்:

சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு ஒரு லாரி சென்றது. சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை தாண்டி எதிர் திசையில் சென்றது.

அப்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. மேலும் சிறிது தூரம் தரதர வென காரை இழுத்துச் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் காரை ஓட்டி வந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த லோக நாதன் (வயது 53) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் கார் அப்பளம் போல் நொறுங்கி யதால் லோக நாதனின் உடல் காருக்குள் சிக்கிக் கொண்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் லோகநாதனின் உடல் காரில் இருந்து மீட்கப்பட்டது.

உயிரிழந்த லோகநாதன், சேலம் இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நாமக்கல்லில் உள்ள அவரது நண்பரை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றபோது விபத்துக்கு உள்ளாகி இறந்தது குறிப்பி டத்தக்கது. இதனிடையே இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றும் சிக்கியதா கவும், அதில் வந்த 2 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் இறந்த லோகநா தனின் உடலை பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News