உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2023-05-26 12:45 IST   |   Update On 2023-05-26 12:45:00 IST
  • சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
  • அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நாமக்கல்:

நாமக்கல்லில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி நிருபர்களிடம் கூறியதாது:-

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்தில், சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நிலம் எடுக்க உள்ள பகுதிகளான வளையப்பட்டி, லத்துவாடி, பரளி, ஆண்டாபுரம் ஆகிய கிராமங்களை பார்வையிட்டோம்.

ஏறத்தாழ 2,500 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளதாக தகவல் உள்ளது. இதனால் ஆயிரக்ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், கிணறுகள் பாதிக்கப்படும். நிலம் எடுக்கும்போது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். எனினும் இதுவரை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு பற்றி எதுவும் சொல்ல வில்லை. இதனால் விவசாயி கள் அச்சத்தில் உள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதில் ஆட்சே பனை இல்லை. இதில் விவசா யிகளுக்கு சொந்தமான நிலம் எடுப்பதில் தான் ஆட்சேபனை யாக உள்ளது.

விவசாயிகளின் அச்சத்தை போக்க வேண்டுமென்ப தற்காக ஆய்வு செய்தோம். சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜூன் 12-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தற்போது நிலம் கையகப்படுத்த உள்ள இடத்தின் அருகே, ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலம் கடந்த 10 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. எந்த பயன்பாட்டிற்கும் நிலம் பயன்படுத்தப்படவில்லை. நாமக்கல் நகராட்சி கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் தூசூர் ஏரியில் கலக்கச் செய்கிறது. இதனால் ஆயிரக்கணககான விளைநிலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News