உள்ளூர் செய்திகள்

தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை படத்தில் காணலாம்.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ்

Published On 2023-06-22 09:55 GMT   |   Update On 2023-06-22 09:55 GMT
  • பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
  • மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம் பாளையம், வெட்டுக் காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங் களில் மழை நீர் சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாகச் சென்று ராஜா வாய்க்காலில் கலந்து விடும். மழை அதிகமாக பெய்யும் போது அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கும். பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.

மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் சென்று பார்வை யிட்டார். பின்னர், உடனடி யாக ஆக்கிரப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.

அந்த நோட்டீஸில், வேலூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சுல்தான் பேட்டை பகுதியில் ஓடை புறம்போக்கு இடத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மண் கொட்டி உள்ள இடத்தில் கட்டிட பணி துவங்க ஏதுவாக ஏற்பாடு செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்ததில், சாலை மட்டத்திற்கு மேல் மண் கொட்டப்பட்டு உள்ளது என தெரிய வருகிறது.

இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள் மண் மேட்டினை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்துக்கு கீழ் உள்ளவாறு சீர் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அவ்விடத்தை சரி செய்ய தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News