உள்ளூர் செய்திகள்

நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள ஒரு கடையில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த காட்சி.

நாமக்கல் பஸ் நிலையத்தில் குட்கா போதை பொருள் பறிமுதல்

Published On 2023-08-25 08:19 GMT   |   Update On 2023-08-25 08:19 GMT
  • நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News