உள்ளூர் செய்திகள்

குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பயன்பாட்டை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.  

திருச்செங்கோடு நகராட்சிக்கு 40 குப்பை சேகரிக்கும் வாகனங்கள்

Published On 2023-08-25 13:24 IST   |   Update On 2023-08-25 13:24:00 IST
  • குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
  • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News