உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டபோது எடுத்த படம்.

வாகனம் மோதி மின்கம்பம் சேதம் 20 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதி

Published On 2023-08-18 09:46 GMT   |   Update On 2023-08-18 09:46 GMT
  • மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
  • மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

மின்கம்பம் சேதம்

இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

20 மணி நேர மின்தடை

இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

Tags:    

Similar News