மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்மனைவி கண் முன்னே கணவன் சாவு
- ழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.
- அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப்பிர வேசத்திற்கு செல்வதற்காக திருச்செங்கோடு வந்து அங்கிருந்து பரமத்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
லாரி மோதியது
அப்போது நல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது குமாரபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் (34) என்பவர் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் குழந்தைவேலுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் அவரது மனைவி வளர்மதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பரிதாபமாக இறந்தார்
அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குழந்தைவேல் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். சிறிது நேரத்திலேயே மனைவி கண் முன்னே அவர் பரிதாபமாக இறந்தார்.
வளர்மதியை ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிைரவர் கைது
இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் கொடுத்த புகாரின்பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் லாரி டிரைவர் ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.