உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு நோட்டீஸ்

Published On 2023-11-06 08:15 GMT   |   Update On 2023-11-06 08:15 GMT
  • தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள்.
  • கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

நாமக்கல்:

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏராளமான பொதுமக்கள் குவிவார்கள். இதனால் கடைவீதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே கடை உரிமையாளர்கள் பாதுகாப்பாகவும், நெரிசலை தவிர்க்கவும் வலியுறுத்தி நாமக்கல் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

சி.சி.டி.வி கேமிரா

அதில் கடைகளின் உள்ளே அதிகமாக பணம் ஏதும் வைத்திருக்க கூடாது. நகராட்சி விதிப்படி சி.சி.டி.வி. கேமிராக்களை கடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்திருக்க வேண்டும். சி.சி.டி.வி. கேமரா இல்லை என்றால் தற்காலிகமாக பாதுகாவலர்களை போட வேண்டும்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை நகை, பணம், செல்போன் மற்றும் அவரது உடைமைகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக வரும் நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அவர்களை செல்போனில் படம் எடுத்து போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

கடைகளை பூட்டும் போது ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும். அவ்வாறு பூட்டாமல் விட்டால் திருடர்கள் உள்ளே புகுந்து திருட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயமாக ஷட்டர் நடுவிலும் பூட்ட வேண்டும்.

திருடர்கள் கடை உரிமையாளர்களையோ வாடிக்கையாளர்களையோ திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து பணியா ளர்களுக்கும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் காவல் அறிவுறுத்தலை தெரிவிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் போக்குவ ரத்திற்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த விழிப்புணர்வு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News