உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம்

Published On 2023-11-06 13:43 IST   |   Update On 2023-11-06 13:43:00 IST
  • பரமத்திவேலூர் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.
  • முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், கோப்பணம்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், இருக்கூர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, ஜமீன் இளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி குப்பரிக்காபாளையம், மணியனூர், நல்லூர், குன்னமலை, மாணிக்கநத்தம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, மணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக காலை 9 மணி முதல் 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம் மற்றும் பல்வேறு திருத்தம் செய்தல் போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு திருத்தங்கள் தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்து அதனுடன் முகவரி, வயது போன்ற அடையாளத்திற்கான படிப்பு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகிய நகல்கள் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News