உள்ளூர் செய்திகள்

சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2023-05-30 13:02 IST   |   Update On 2023-05-30 13:02:00 IST
  • வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
  • சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உலகப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50).

இவரும் இவரது மாமியார் கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்த தனமணி (65) என்பவரும், உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

சித்தளந்தூர்- ஜேடர்பாளையம் சாலையில், உப்புபாளையம் பிரிவு அருகே சாலையின் ஓரமாக மண் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில், ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவர் சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த முத்துசாமி மற்றும் தனமணி மீது மோதினார்.

இதில் முத்துசாமி, தனமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து, தனமணியை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், முத்துசாமியை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

அங்கு முத்துசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி கோமதி (40), நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர், சரக்கு ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News