உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையத்தில் ம.தி.மு.க. கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

Published On 2023-06-27 13:32 IST   |   Update On 2023-06-27 13:32:00 IST
  • பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
  • இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சிவம் (வயது 52). இவர் பள்ளிப்பாளையம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் ம.தி.மு.க., நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.

இந்த நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட ஒட்ட மெத்தை பகுதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நாகராஜி டம் புகார் தெரிவித்தனர். நான், நகராட்சி பணியாளர் களிடம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 24-ந் தேதி நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்ட்ஹ நிலையில் களியனூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கவுன்சிலர் சிவம் செல் போனில் தொடர்பு கொண்டு ஆக்கிரிமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தை யால் திட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிவம் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வெடியரசம் பாளையம் பகுதியில் இருந்து பள்ளி பாளையத்

திற்கு வந்தார். அப்போது அவரை வழிமறித்த நாகராஜ் தகறாறில் ஈடுபட்டு கல்லால் தாக்க முயன்றதஅக தெரி கிறது.

மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் தெரிகிறது. இது பற்றி சிவம் பள்ளிப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வரு கிறார்கள்.

Tags:    

Similar News