உள்ளூர் செய்திகள்

கொல்லிமலை மாசிலா அருவியை ஆண்கள் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கொல்லிமலை மாசிலா அருவியை ஆண்கள் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-19 14:58 IST   |   Update On 2023-10-19 14:58:00 IST
  • கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது.
  • தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் கொல்லிமலை யூனியன் சார்பில் கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த ஆண்கள் சுய உதவி குழுவின் கட்டுப்பாட்டில் சுற்றுலா பயணிகளிடம் சுங்க வரி கட்டணம் வசூல் செய்து மாசிலா அருவியின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது மாசிலா அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், ஆண்கள் சுய உதவி குழுவினர் மாசிலா அருவி நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாசிலா அருவியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News